2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

50 அடி மரத்தின் உச்சியில் அழகிய வீடு

Kogilavani   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 50 அடி உயரமான மரத்தின் உச்சியில் தனது புதிய வீட்டை நிர்மாணித்துள்ளார். இவ்வீடானது சமயலறை,  குளியலறை என சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஹுனான் மாகாணத்திலுள்ள  க்ஸ்பிங் கிராமத்தை சேர்ந்த ஹியோங்  யூஹு (வயது 63) என்பவரே இவ்வாறு மரத்தின் உச்சியல் தனது வீட்டை நிர்மானித்துள்ளார். அவர்,  பீஜிங்கில் பறவைகளின் கூட்டைப்போன்று அமைக்கப்பட்ட ஒலிம்பிக் அரங்கைப் பார்த்து  வியந்து தனது வீட்டை மரத்தின் உச்சியில் நிர்மாணித்துள்ளதாக கூறுகிறார்.

' பறவைக் கூட்டு அரங்கானது பார்க்கையில் தரையில் ஒரு பறவையின் கூட்டைப்போன்று அழகாக இருந்தது. அதைப் பார்த்து, நான் ஏன் உண்மையான பறவைக்கூட்டை மரத்தில் அமைக்கக்கூடாது என நினைத்தேன்' என்கிறார் ஹியோங் யூஹு.

ஜுஜிப் மரத்தின் உச்சியில் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வீடு பலகையிலான படிக்கட்டு மூலம் தரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு அவருக்கு சுமார் 5 லட்சம் ரூபா செலவாகியுள்ளது.

மலசலக்கூடம், குளியலறைக்கான நீரானது வீட்டின் கூரையில் அமைக்கப்பட்டுள்ள தாங்கியிலிருந்து எடுக்கப்படுகின்றது.

படுக்கையறை,  தொலைக்காட்சி முதலானவற்றைக் கொண்ட வரவேற்பறை என்பனவும்  இவ்வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹியோங் இவ்வீடு தொடர்பாக குறிப்பிடுகையில் இது மிகவும் பாதுகாப்பானது.  மற்றும் ஒரே நேரத்தில் 18 விருந்தினர்கள் இந்த வீட்டில் தங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அவருடைய மனைவி வாங் சுவானிற்கு மரத்தின் உயரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது கணவர் இந்த வீட்டை மிகவும் நேசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வழமையாக காலை உணவிற்கு பின்னர் சில நேரங்களில் அதற்கு முன்னதாகவும் இந்த மர உச்சி வீட்டிற்கு சென்றுவிடுவார்.  பின்னர் பகல்,  இரவு உணவுக்காக எமது வீட்டிற்கு  வருவார். பெரும்பாலான நாட்களில் நள்ளிரவில் நான் அழைக்கும் வரை அங்கேயே தங்கியிருப்பார் என்கிறார் வாங் சுவான்.


 


You May Also Like

  Comments - 0

  • ruthra Friday, 24 December 2010 11:14 PM

    மரம் ஒன்று மட்டும்தான் நிம்மதியாக இருந்தது. அதையும் விட்டுவைக்கலயா? என்ன உலகமய்யா?

    Reply : 0       0

    xlntgson Thursday, 30 December 2010 10:20 PM

    மனிதர்கள் மர உச்சியில் வானரங்கள் போல் வாழ்ந்த காலங்களும் உண்டு! குகை வாசிகளுக்கு முந்திய காலம் அது!
    மரங்களை வெட்டிவிடாமல் இது போன்ற கண்டுபிடிப்புகள் சூழலைப் பாதுகாக்குமாக இருப்பின் வரவேற்போமாக!
    ஒரு சில மரங்களையே வளர்ப்பதால் இம்மாதிரியான பிரம்மாண்டமான சுமை தாங்கும் மரங்கள் இருக்கும் அறிவும் நமக்கு வேண்டும். இயற்கைக்கு ஒவ்வும்! மழை பொழிவு பாதிக்கப்படாது ஆனால் பறவைகள் & மர விலங்குகள் பாடு திண்டாண்டமாகிவிடாமல் இருக்கவேண்டும்.
    எங்குபார்த்தாலும் மரங்களை வெட்டி அதில் வீடுகளை கட்டுவதும் மரங்களை தறித்து..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X