2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

64 நாட்கள் தொடர்ந்து தூங்கிய பெண்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலியன் (வயது 17). அவர் தினமும் 18 முதல் 19 மணிநேரம் நித்திரை கொள்வார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய வைத்தியர்கள், அவருக்கு உறக்கம் தொடர்பான அரிய வகை நோயொன்று உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

'ஸ்லீப்பிங் பியூட்டி சின்ட்ரோம்' என்னும் குறைபாடு உள்ளவர்கள் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ஏன் ஆண்டுக் கணக்கில் அதன் அறிகுறியின்றி இருப்பார்களாம்.

அவர்கள் நீண்ட நேரம் தூங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தை போன்றும் நடந்து கொள்வார்கள். இந்த குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நிக்கோல் தொடர்ந்து 64 நாட்கள் உறங்கியுள்ளார். அதனால் அவர் தனது பிறந்தநாள், பண்டிகைகளை தவறவிட்டுள்ளார் என்று அவரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X