2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

7 மாத குழந்தையை ஓடும் பஸ்ஸின் முன்பாக வீசிய சிறுமிகள்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

7 மாதங்களே நிறைந்த ஆண் குழந்தையொன்றை அதன் சகோதரியின் கைகளில் இருந்து பறித்தெடுத்து, பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றுக்கு முன்னாள் வீசிய இரு பதின்மர் வயது சிறுமிகளை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டாவிஸ் டெபேதீன் எனும் இக்குழந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பியது.
இச்சம்பவத்தின் பின் 14 வயதுடைய இரு சிறுமிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கிறைடோன் நகரில் வைத்து 13 வயதான சிறுமியொருத்தியின் கைகளில் இருந்து குறித்தக் குழந்தையை பறித்தெடுத்து பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸிற்கு முன்பாக எறிந்துள்ளனர். எனினும்  பஸ்ஸின் சாரதி குழந்தையின்  உடலில் படாதவாறு பஸ்ஸை வேறுவழியில் செலுத்தியதால் குழந்தை சிறு காயங்களுடன் தப்பியது.

கைது செய்யப்பட்ட சிறுமிகளுக்கு எதிராக தாக்குதல், இனவாதமாக திட்டியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தையின் தொழிலதிபரான தந்தை ராஜிவ் டெபேடீன் வயது 42 தெரிவிக்கையில் 'நான் அவர்களை அழைத்துச் செல்வதற்காக அவ்விடத்தை அடைவதற்கு ஒருசில நிமிடங்களே இருந்தபோது பொலிஸாரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது.  அவர்கள் 'உங்கள் குழந்தை தாக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்கள். நாங்கள் எங்கள் குழந்தையின் மருத்துவச் சான்றிதழ் வந்தப்பின்பே நிம்மதியடைந்தோம்' எனக் கூறியுள்ளார்.

எமது கலாசராரத்தின்படி எம் ஒவ்வொரு குழந்தைக்கும்  பிரத்தியேகமான தேவதையொன்றுள்ளது எனக் கூறுவோம்.  எனது குழந்தைக்கும் ஒரு தேவதை இருந்திருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X