2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து ஆச்சரியகரமாக காப்பாற்றப்பட்ட 3 வயது சிறுவன்

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எட்டாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த 3 வயது சிறுவனொருவன் வாயுச்சீராக்கி இயந்திரத்துக்கும் கட்டிடத்திற்குமான இடுக்கில் சிக்கிக்கொண்டபின் அயலவர்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பெய்ஜிங்கிலுள்ள தொடர்மாடியொன்றில் வசிக்கும் இச்சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவனின் பெற்றோர் வெளியில் சென்றிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாடியிலிருந்து இச்சிறுவன் தவறி வீழ்ந்தான். எனினும் அதிஷ்டவசமாக வாயுச்சீராக்கி இயந்திரத்திற்கும் கட்டிடத்திற்கும் இடையிலான இடைவெளியில் அவன் சிக்கிகொண்டதால் கீழே விழவில்லை.

அவனின் கூச்சல் கேட்டு அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அவன் வழுக்கத் தொடங்கியபோது தாமே அவனை காப்பாற்றத் தீர்மானித்தனர்.

கடை ஊழியர்களான வாங் மற்றும் ஸோ ஆகியோர் மேலும் சிலரின் உதவியுடன் 7 ஆவது மாடியில் நின்றவாறு இச்சிறுவனை மீட்டெடுத்தனர்.

அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்த சிறுவன் காப்பாற்றப்பட்டமை ஆச்சரியமளிக்கிறது. அயலவர்களின் துணிச்சலான முயற்சி பாராட்டுக்குரியது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0

  • Jeewan Tuesday, 21 June 2011 06:49 AM

    குழந்தையின் பெற்றோருக்கு ஒரு குட்டு, அவர்களின் அயல் வீட்டாளர்களுக்கு ஒரு சொட்டு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .