2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இல்மனைட் அகழ்வு தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வு

சண்முகம் தவசீலன்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்மனைட் அகழ்வு தொடர்பில் வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாம் கட்ட ஆய்வு நடவடிக்கை புல்மோட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிட்டட்டின் ஏற்பாட்டில் புல்மோட்டையில் உள்ள கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தை வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.

அந்தவகையில், நாயாறு,செம்மலைப் பகுதிகளில் எடுக்கப்படும் கனிம மண்ணைக் கொண்டு கட்டம் கட்டமாக பிரித்து அதனை தேவைக்கு எடுக்கலாம் என்றும் இதற்கான தொழிற்சாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்கு இடம் உள்ளதோ அங்கு கொடுத்தால் தொழிற்சாலையை நிறுவி இயங்கத் தயாராக இருப்பதாக இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தானபம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை பகுதியை அண்மித்த பகுதியில் இந்த தொழிற்சாலை அமைந்து செயற்பாட்டால் மக்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவனேசனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த இடத்துக்கு அனுமதிகிடைக்குமாக இருந்தால் அந்த இடத்தில் இல்மனைட் தொழிற்சாலையை அமைக்க முழுமையாக விருப்பம் கொண்டுள்ளதாக கனியமணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க சுற்றுச்சூழல் அதிகார சபையின் அறிக்கை குறித்த பகுதியில் மணல் அகழ்வதால் எதுவித பிரச்சனையும் இல்லை என்றும் கனியமணல் கூட்டுத்தாபனம் கொடுக்கப்பட்ட அளவீட்டுக்கமைய கனிம மணல் அகழ்வினை மேற்கொள்ளலாம் என்றும் சுற்றுச்சூழல் அதிகார சபையினர் தெரிவித்துள்ளார்கள்.

மணல் அகழப்படும் இடத்தை மீண்டும் நிரப்பக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கான அறிக்கையினை அடுத்த மாதம் அளவில் சுற்றுச்சூழல் அதிகார சபை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்மனைட்டை மூலப்பொருளாகக் கொண்டு ஓட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை அண்டிய பிரதேசத்தில் கனிப்பொருள் கூட்டுத்தாபனம் ஒன்றை அமைத்து செயற்பட மாவட்டத்தில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவித்தால் அனை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் கனியமணல் கூட்டுத்தாபனம் சார்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாண விவசாய அமைச்சர் க. சிவனேசன், வட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன், பொ. ஜங்கரநேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் யாழ்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் கரைதுரைப்பற்று பிரதேச சபை தவிசாளர், குறித்த மணல் அகழ்வு இடம்பெறவுள்ள கொக்கிளாய் வட்டார உறுப்பினர், திணைக்கள தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .