2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பல திட்டங்கள்

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தலா இரண்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் முஹம்மது நவாப் முஹம்மமது துஷான் தெரிவித்தார்.

'இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வற்றாப்பளையைச் சேர்ந்த ச.சதீஸ்கரன் இளைஞர் நாடாளுமன்ற  உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு, இம்மாதம் நான்கு நாட்கள் விஷேட செயலமர்வுகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை குறித்த செயலமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.

அத்துடன், புதிய இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முல்லைத்தீவிலிருந்து இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரூடாக, மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலகங்களிலும் தலா இரண்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான நிதியை தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் வழங்கவுள்ளது. ஒரு திட்டத்துக்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்  வீதம் ஒரு பிரதேச செயலகத்திற்கு 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட  குமுழமுனைக் கிராமத்தில் வாசிகசாலையொன்றை அமைப்பதற்கும்  வற்றாப்பளை கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு  பாதுகாப்பு வேலி அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .