2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐயன்குளத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு

Sudharshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய்  பிரதேச செயலக பிரிவில் ஐயன்கன்குளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்;கை விடுத்துள்ளனர்.

ஐயன்கன்குளம், பழைய முறிகண்டி, புத்துவெட்டுவான் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது. காட்டு யானைகளின் தொல்லையால் குறித்த கிராமங்களில் மக்கள் வாழமுடியாத நிலை காணப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (10) இரவு ஐயன்கன்குளம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சிறுபோக நெற்செய்கை நிலங்களுக்குள் புகுந்த யானைகள், பெருமளவான பயன்தரும் மரங்களையும் பயிர்களையும் அழித்துள்ளன.

இந்தப் பகுதிகளில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் யானை வெடிகளை வனஜீவராசி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கியது. எனினும், யானை வெடிகளுக்கு யானைகள் பயப்பிடவில்லை. இதனால், யானைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறு மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .