2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கூட்டமைப்பின் வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும்’

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

‘நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு  - கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும்” என்று,  கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், ​இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில், ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஒரு வலுவான தீர்மானங்களாக அமைந்திருந்தால், இன்று இந்த முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்காதென்றார்.

இப்போது எடுத்த இறுக்கமான முடிவு, கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிவித்த அவர், அவ்வாறு எடுக்கப்பட்டிருந்தால் இன்று உலகத்துக்கே சவால்விடும் அளவுக்கு இலங்கை அரசாங்கம் செயற்பட்டிருக்க முடியாதெனவும் கூறினார்.

சிங்கள பேரினவாதம் சர்வதிகார ஆட்சிமுறையும்  நாட்டில் தலைதூக்கி நிக்கின்றது என்ற ஆணவத்தில்தான், இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக இந்த முடிவை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

43ஆவது ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வைத்து  இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்தால் தான் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியுமென்றார். 

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட யாப்பு முறையைக் கொண்ட அரசாங்கம் தங்கள் நாட்டில் கூட இறையாண்மையைப் பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது. இறையாண்மை இங்கு இல்லை

எதிர்வரும் காலங்களில், சர்வதேச சமூகம் இதற்குகாக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு சர்வதேச ரிதியான நீதி விசாரணையினை கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனநாயக போராளிகள் கட்சி தெளிவாக இருக்கின்றது. சர்வதேசம் இதனை செய்யும் என்று நாங்கள் நம்புகின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .