2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கிணறுகளை புனரமைப்பதற்காக நிதி தேவை’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 259 புதிய விவசாயக்கிணறுகளை அமைப்பதற்கும், 202 வரையான விவசாயக்கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக புதிய விவசாயக்கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட மற்றும் சேதமடைந்த விவசாயக்கிணறுகளை புனரமைக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றன. இதுதொடர்பில் விவசாயிகளால் புதிய கிணறுகளை அமைத்து தருமாறும், அதேபோன்று சேதமடைந்த கிணறுகளை புனரமைத்து தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் கருத்துத்தெரிவித்த மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்டத்தில் 259 வரையான விவசாயக்கிணறுகளின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

இதற்கான மதிப்பீடாக 77 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றதெனவும், 202 வரையான விவசாயக்கிணறுகளை புனரமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றமையினால், இதற்காக 26 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளாகத் தெரிவித்ததுடன், இவ்வாறு புதிய விவசாயக்கிணறுகளை அமைப்பதற்கும் சேதமடைந்த கைவிடப்பட்ட கிணறுகளை புனரமைப்பதற்கும் 103 மில்லியன் ரூபாய் நிதி தேவைபெயன மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .