2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணி நிலம் வேண்டுமென கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2017 மே 29 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள்,  தங்களின் பூர்வீக நிலத்துக்குச் செல்ல அனுமதிக்க ​வேண்டும் என, வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

கிளிநொச்சி,  திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து, பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்துடன் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இரணைத்தீவு மக்கள், தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இரணைமாதாநகரில் கடந்த 1ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர், அவர்களது போராட்டம் 30ஆவது நாளை இன்று எட்டியுள்ள நிலையிலும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,  

நேற்றைய பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன்  உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .