2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கொரோனா நபர்களை அழைத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது’

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களென  கருதி, மன்னாரில் தனிமைப்படுத்துவதற்காக அழைத்து வரும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென, மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை, மன்னாருக்குக் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதெனவும் குறித்த நடவடிக்கை மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

“மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள 'காமன்ஸ்' கட்டட தொகுதியில், நேற்று (15) குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள்   வெளியாகி உள்ளது.

“இதனால், மன்னார் மக்கள் அச்சசமடைந்த நிலையில் உள்ளனர்.குறித்த 'காமன்ஸ்' ஐ அண்டிய பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்” எனவும், அவர் சுட்டிக்காட்டினார். 

பாதிப்புக்குள்ளானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள ஒத்துழைப்பை வழங்க முடியுமெனத் தெரிவித்த அவர், ஆனால் வெளி நாட்டைச் சேர்ந்த, ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களை மன்னாருக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாதெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .