2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில், கசிப்பு உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாப்புலவு பூர்வீக நிலத்தில், இராணுவம் நிலைகொண்டுள்ளதால், கேப்பாப்புலவு மக்கள், சூரிபுரம் மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர்.

260 வரையான குடும்பங்கள், அடிப்படை வசதிகளற்ற நிலையில் தங்களுடைய சொந்தக் காணிகளில்; குடியமர முடியாமலும் தொழில் வாய்ப்புகளையும் தேடிக்கொள்ள முடியாத நிலையிலும் நெருக்கடியான நிலையில், இம்மாதிரிக் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்காமையும் கசிப்புடன் பிடிபடுபவர்கள் இலகுவாக வெளியில் வந்து மீண்டும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதும், பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாதிரிக் கிராமத்தில், நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் கசிப்பு காணப்படுவது இளைய தலைமுறையினரை அழிவுப் பாதைக்குள் கொண்டுபோய் விடுமெனவும் கசிப்பினைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் குறிப்பாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் குடும்பங்களை இனங்கண்டு விழிப்புணர்வு நடவடிக்கையினை அதிகாரிகள் எடுக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .