2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலை அபிவிருத்திக்கு ரூ.990 மில்லியன் தேவை

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடியாக 990 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பிடப்பிடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

'கிளிநொச்சி மாட்ட பொதுவைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு 990 மில்லியன் ரூபாய் நிதி உடனடியாக தேவைப்படுவதாக மதிப்பிடப்;பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு அறிக்கையானது, வடமாகாண சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்;களுக்கும் பங்கிடப்படுகின்றன. இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்துக்கு அதிக நிதியும், அடுத்தப்படியாக கிளிநொச்சி மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகங்கள் முடிவுகளை எடுக்கும்' என்றார்.

'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் சுகாதார சேவைகளின் உட்கட்டமைப்புக்கள் முழுதாக சிதைவடைந்துள்ளன. இந்த நிலையில் கிடைக்கின்ற நிதிகளை கொண்டு பிரதேச மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளின் சிறிய தேவைகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படுகின்றன.

இரண்டாம்கட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு பெரியளவிலான நிதி தேவையாகவுள்ளது. அதற்கான நிதி அடையாளம் காணப்படுவதன் மூலம் பணிகளை முன்னெடுக்கலாம். ஒஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்கள் மூலம் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு 9000 மில்லியன் ரூபாய் நிதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இரு நாட்டுப் பிரதிநிதிகளும், வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளைப் பார்வையிட்டுள்ளனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .