2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிளி.பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான நட்டஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்தில் நட்டமடைந்த வர்த்தகர்களுக்கான நட்டஈட்டை 2 வாரங்களுக்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இரவு, கிளிநொச்சிப் பொதுச்சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 110 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகியன. இதனால் வர்த்தகர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கினர்.

கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நிரந்தரகட்டத்தில் வர்த்தகர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

நட்டஈடாக 74 மில்லியன் ரூபாய் கிளிநொச்சியில் தீயில் எரிந்த வர்த்தகர்களுக்கு நட்டஈடாகவும் புதியசந்தைக் கட்டடத்துக்கு 150 மில்லியனும், தீயணைப்புப்படையணி உருவாக்க 100 மில்லியனும் எல்லாமாக 324 மில்லியன் அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X