2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக காட்டு மரங்கள் வெட்டப்படுகின்றன

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களால், சட்டவிரோதமாக காட்டுமரங்கள் வெட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில், சட்டவிரோதமான முறையில், மிகவும் பெறுமதி வாய்ந்ந்த மரங்கள் வெட்டப்பட்டு, வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

2013ஆம் ஆண்டிலிருந்து, குறித்த பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளரே, மரக் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பொலிஸாரின் செல்வாக்குகளுடன், மரக் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளுக்கு, சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்கள் கொண்டு செல்லப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இதனை தடுப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X