2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் மருத்துவ முகாம்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் மருத்துவ முகாம் நேற்று (09) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தின் கீழுள்ள நாவல்நகர் கிராமத்தில் இடம்பெற்றது. கஷ்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவ தேவைகளை இனங்கண்டு தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தினால் தொடர்ச்சியாக நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த கிராமத்தை அண்டிய பகுதியை சேர்ந்த சுமார் 175 மேற்ப்பட்ட மருத்துவ தேவை உடையோர் குறித்த சேவையை பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த விசேட மருத்துவ குழுவினரினால் வெளிநோயியல் சிகிச்சைகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசணைகளும் வழங்கப்பட்டது. 

அத்துடன் குடும்ப வன்முறை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், நுண்கடன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிறைவாழ்வு இல்ல இயக்குநரும், தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் துணைவியுமான உள நல மருத்துவ ஆலோசகர் டொக்டர் தயாளினி தியாகராஜாவால் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மேலும் குறித்த நடமாடும் சேவைகள் மற்றும் முன்பள்ளிகள் எனப் பல்வேறு செயற்திட்டங்கள் நிறைவாழ்வு மையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாடுகள் அனைத்திற்கும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பேரருட்திரு டானியேல் செல்வரத்தினம் தியாகராஜா,  ஆலோசனை வழங்கி வரும் நிலையில் மேலும் பல கஷ்ட பிரதேசங்கள் அடையாளம் கண்டு மக்களிற்கு சேவைகளை வழங்க உள்ளதாகவும் இதன்போது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .