2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்’

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

“தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வொன்று, இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது. இந்‌நிகழ்வில்‌  கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இப்பொழுது தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வேறு  வேறு நிலைப்பாட்டை கொண்டவர்களாக  இருக்கிறார்கள். ஒன்று பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு தமிழ் சமூகம் தேசிய இனம் வாக்களித்தது.

“அதே நேரத்திலே பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது. நாங்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம்.

“நாங்கள் எங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சனைகளையும்  மறக்க முடியாத வடுக்களாக எங்களுடைய நெஞ்சங்களிலே நாங்கள் இன்றைக்கும் சுமந்திருக்கிறோம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலிலே நீங்கள் அச்சப்படத்தேவையில்லை.

“தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்ற ஒரு அச்சத்தோடு நாங்கள் எங்களுடைய மக்கள் வாழுகிறார்கள். அச்சப்பட வேண்டாம். அச்சப்படத்தேவையில்லை.

“எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தவர்கள் நாங்கள். எவ்வளவு வடுக்களை இன்றைக்கும் சுமந்து கொண்டு இருக்கின்ற இனம் எங்களுடைய இனம். தமிழ் பேசுகின்ற இனம். ஆகவே, அந்த நிலைக்கும் அதுக்கு மேல் தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .