2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தொழிற் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'இலங்கை  திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினால் 2016 ஆம் ஆண்டின் 1ம் பிரிவிற்கான தொழிற் கற்கை நெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பயிலுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன' என உதவிப் பணிப்பாளர் பண்டார மற்றும் நிகழ்ச்சித் திட்டமிடல் அலுவலர் கோரியுள்ளனர்.

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் Nஏஞ (தேசிய தொழிற்தகமை சான்றிதழ்) மட்டத்திலான புதிய தொழிற்பயிற்சி கற்கை நெறிகளின் முதலாம் பிரிவுகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. தகமைக்கேற்ப தொழிற்பயிற்சியுடன் கூடிய விரும்பிய  தொழிலை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் 6 மாத கால கற்கைநெறி, முடிவின் பின்னர் மேலதிக பயிற்சியுடன் இணைக்கப்படுவதுடன் தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பதாரிகள் கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாள் குளிரூட்டலும் வளி சீராக்கலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தோற் பொருள் உற்பத்தியாளர்,   மின்னியலாளர்,  காய்ச்சி இணைப்பவர், அழகுக்கலையும் சிகை அலங்காரமும்,  தையல், அலுமினியம் பொருத்துனர், தச்சுவேலை மற்றும் கணினி பட வரைஞர்,  போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு, இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, இல:108, புகையிரத நிலைய வீதி, வைரவ புளியங்குளம், வவுனியா என்ற விலாசத்துக்கு அல்லது 024-2221617, 071-1213357 எனும் அலைபேசி இலக்கங்களுக்கூடாக தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X