2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புன்னைநீராவியை பிரிக்க வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவை மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

உழவனூர், நாதன் திட்டம், கல்;லாறு, புன்னைநீராவி, குமாரசாமிபுரம், கண்ணகிநகர் ஆகிய ஆறு கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 1,757 குடும்பங்களைச் சேர்ந்த 5,517 பேர் வசிக்கின்ற பரந்த பிரதேசமாக புன்னைநீராவி கிராமஅலுவலர் பிரிவு காணப்படுகின்றது.

இதனால், இந்தக் கிராம அலுவலர் பிரிவின் நிர்வாகச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் உழவனூர், கல்லாறு கிராமங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு கிராம அலுவலர் பிரிவையும் புன்னைநீராவி, நாதன்திட்டம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி ஒரு கிராமஅலுவலர் பிரிவையும் குமாரசுவாமிபுரம், கண்ணகிநகர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு கிராமஅலுவலர் பிரிவையும் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X