2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

42 பேர் சமுதாயம் சார் சீர்திருத்தப் பணிக்குட்படுத்தப்படுகின்றனர்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய சிறிய குற்றங்கள் செய்த வழக்குகளுடன் தொடர்புபட்ட 42 பேர் சமுதாயம்சார் சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ் சமுதாயம் சீர் திருத்தப்பணிகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மதுபோதையில் பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, கசிப்பு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, தண்டப்பணம் செலுத்த முடியாத 42 பேர் சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ் சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் செ.யோ.றொசாந் கருத்து தெரிவிக்கும்போது,

“1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயம்சார் சீர்திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ் 42 பேர் கடந்த ஜனவரி மாதம் முதல் சமுதாயம்சார் சீர்திருத்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்;களால் விழிப்புணர்வு கருத்துக்கள், உளவளத்துறை தொடர்பான கருத்துரைகளும் வழங்கப்படுகின்றன“ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .