2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

Gavitha   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனுக்கும் வன்னேரிக்குளத்துக்கும் இடையிலான வீதியில் புலியொன்றின் நடமாட்டம் காணப்படுவதான் காரணமாக, குறித்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் அச்சத்துடன் தங்களது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனைவிழுந்தான் கிராமத்துக்கு முன்னரான ஒன்பதாம் கட்டைப் பகுதியிலேயே, வீதியினைக் குறுக்கறுத்து புலி பாய்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், காலையில், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களள் போன்றவற்றில், அக்கராயன் பிரதேச மருத்துவமனை, கிளிநொச்சி நகரம் ஆகியவற்றுக்கு, தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ஒன்பதாம் கட்டைக் காட்டுப்பகுதியில், கடந்த 15 நாட்களாக வீதியில் புலியின் நடமாட்டம் காணப்படுகிறது.

இதனையடுத்து, போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் அச்சமடைந்து, அக்கராயன் பொலிஸார், கிராம அலுவலர்கள் ஆகியோரிடம் புலியின் நடமாட்டம் தொடர்பாக தகவலை வழங்கியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .