2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத தாய்க்கு விளக்கமறியல்

George   / 2016 ஜூலை 15 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப் பகுதியில் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்;பாது அவர்களை சட்டவிரோத செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திய தாய் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மதுபோதையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தையை பிணையில் செல்லுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற ஏ.ஏ.ஆனந்தராஜா, உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரந்தன் சிவபுரம் பகுதியில் பாடசாலைகளுக்குச் செல்லாத சிறுவர்களை கற்றல் செயற்பாடுகளில் மீள இணைத்துக் கொள்ளும் பொருட்டு கண்டாவளைப்பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து வியாழக்கிழமை (14) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பாடசாலைகளுக்குச் செல்லாத 16 சிறுவர்கள் பிடிக்கப்பட்டனர்.

இவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து நான்கு சிறுவர்களை, சான்று பெற்;ற நன்னடத்தை பாடசாலையில் தங்கவைக்குமாறும் ஆறு சிறுவர்களை, சிறுவர் இல்லங்களில் இணைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

ஏனைய ஆறு சிறுவர்களும் அவர்களது பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பின்னர் அவர்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது அவர்களை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்திய தாய் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன், மதுபோதையில் பிள்ளைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட தந்தையாரை பிணையில் செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் சிறுவர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்படாமல் அவர்களை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்துதல், சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்துதல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குதல், போதைப்பொருள் விற்பனைகளுக்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு இவ்வாறு பயன்படுத்;தப்பட்டு வருகின்றன.

இவற்;றை தடுத்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அது சார்ந்த திணைக்களங்கள் நீதிமன்ற ஆலோசனைகளுக்கு அமைவாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த வாரம் பாடசாலைகளுக்குச் செல்லாத 17 சிறார்களும் கடந்த திங்கட்கிழமை (11) பொன்னகர் இந்துபுரம் ஆகிய பகுதிகளில் 16 சிறுவர்கள் பிடிக்கப்பட்டு இவ்வாறு சிறுவர்; இல்லங்களிலும் சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளிலும் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .