2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மாணவிகளின் மயக்கத்துக்கு காலாவதியான பிஸ்கட்டுகளே காரணம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில், மாணவிகள் மூவர் பாடசாலையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (14) மயங்கி விழுந்தமைக்கு, காலாவதியான பிஸ்கட்டுகளை உட்கொண்டமையே காரணமென, அக்கராயன் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கந்தபுரம் இல.2 பாடசாலையில், தரம் 3, 7இல் கல்வி பயிலும் மாணவிகள் மூவர், காலையில் பாடசாலைக்குச் செல்லும் போது, கிராமத்தில் உள்ள கடையொன்றில் பிஸ்கட் பக்கெட்டுகளை வாங்கிச் சென்று, பாடசாலையில் வைத்து உட்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, சிறிது நேரத்தின் பின்னர், அந்த மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

இவ்வாறு மயங்கி விழுந்த மாணவிகள் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியிருந்தனர்.

மாணவிகள் உண்ட பிஸ்கட், கடந்த மாதம் 14ஆம் திகதியன்றே காலாவதியான பிஸ்கட் என, பாடசாலை அதிபர் திருமதி விமலேஸ்வரனும், இது தொடர்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X