2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மன்னல்’ நூல் வெளியீட்டு விழா

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

2020ஆம் ஆண்டுக்கான கலைஞர் ஒன்று கூடல் நிகழ்வு மற்றும் 'மன்னல்' நூல் வெளியீட்டு விழா,  மன்னார்   பிரதேச செயலாளாரும் மன்னார் பிரதேச  கலாச்சார பேரவையின் தலைவருமான எஸ்.பிரதீப் தலைமையில், மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் நடைபெற்றன.

குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் வருடா வருடம் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் 'மன்னல்' நூலானது வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. 

குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில், மன்னார் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலாமன்ற பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மாதர் ஒன்றியப் பிரதிநிதிகள், பல்துறைசார் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

அதன் பின்னர்  நடைபெற்ற கலைஞர் ஒன்று கூடலின் போது, 2020ஆம் ஆண்டுக்கான புதிய கலாசார பேரவை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், மே மாதம் நடைபெறவுள்ள காலசார விழாவில் வெளியிடப்படவுள்ள மலர் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

 அதே நேரத்தில், இவ்வருடம் நடைபெறவுள்ள கலாசார நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .