2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முன்பள்ளி மாணவர்களின் சீருடையில் CSDயின் சின்னம்

எஸ்.என். நிபோஜன்   / 2017 மே 24 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில், சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளி மாணவர்களுக்கு, சிவில் பாதுகாப்புப் பிரிவின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகளே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கே, முதற்கட்டமாக இவ்வகையான சீருடைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்காக, மாணவர்களிடம் இருந்து சிறுதொகை பணம் அறவிடப்பட்டதாகவும், மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில், குறித்த முன்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சீரூடைகளில், CSD என எழுதப்பட்டிருந்ததால், பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவ்வாறான சீருடைகள் விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையிலேயே, CSDக்குப் பதிலாக, அப்பிரிவின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகள், தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 163 முன்பள்ளிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 97 முன்பள்ளிகளும், யாழ்ப்பாணத்தில் 6 முன்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில், 503 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்ற நிலையில், 5,840 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இங்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பளத்தில், சிவில் பாதுகாப்புப் படையாளி எனும் பதவி நிலையில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .