2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் குறை

Menaka Mookandi   / 2016 ஜூலை 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றன.

விபத்துகள் ஏற்படுகின்றபோது விபத்தை எதிர்கொண்டவர்கள் நீண்டநேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகள் இழுத்தடிப்புகளுக்குப் பின்னரே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இம்மருத்துவமனையில் பெரும்பான்மை மருத்துவர்கள் கூடுதலாகப் பணிபுரிவதனால்; மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளர்கள் மொழிப் பிரச்சனையினால் தமது நோய்களை மருத்துவரிற்கு தெரியப்படுத்த முடியாதிருப்பதாகவும் இதனாலேயே நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொள்வதாகவும் மருத்துவர்கள் கூடுதலாக விடுப்பில் செல்வதன் காரணமாக நோயாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துகளினால் விடுதிகளில் அனுமதிக்கப்படுபவர்கள் ஐந்து மணித்தியாலம் கடந்தும் மருத்துவர் பார்வையிடாமல் இருந்ததன் காரணமாக தனியார் மருத்துவமனைகளை விபத்தினை எதிர்கொண்டவர்கள் நாடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் போரினால் கூடுதலான மாற்றுத் திறனாளிகளைக் கொண்டிருப்பதன் காரணமாக மருத்துவமனையினை நாடிச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை கவனித்து அடிக்கடி விடுப்பில் செல்லும் மருத்துவர்களை நோயாளர்களின்; பணிக்கு கூடுதலாக கவனம் செலுத்துமாறும் மருத்துவமனை நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், வடமாகாண சபை உறுப்பினர்களிடமும் மக்கள் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .