2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பதவி நீக்கம்; ’மீள் பரிசீலனை செய்யவும்’

Kogilavani   / 2017 ஜூலை 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

'வடக்கு போக்குவரத்து அமைச்சரை, பதவி நீக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என, வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், வடக்கு முதலமைச்சரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு முகவரியிடப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு பிரதியிடப்பட்டுள்ள இக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில மாதங்களாக, வடக்கில் ஏற்பட்டுள்ள முரண்தகு அரசியல் நிலைப்பாடுகளை அவதானித்தவர்கள் என்ற வகையிலும், வட மாகாணத்தின் முக்கிய சேவையாளர்கள் என்ற நிலைப்பாட்டிலும், தங்களிடம் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைக்க தலைப்படுகின்றோம்.

வட மாகாணசபை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கம்பெற்ற நிலையில், நான்கு வருடங்களாக செயற்பாட்டு நிலையுடனான வினைத்திறன் சபையாக நாம் கண்ணுற்றிருந்தோம்.

இதன் பிரகாரம், வட மாகாண போக்குவரத்து துறையும் எவ்வித பிறழ்வுகளும் இன்றி சீரிய நோக்கோடு அதன் இலக்கை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

இதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சராகிய நீங்களும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்
பா.டெனிஸ்வரனுக்கும்; ஏதுவான ஒத்துழைப்புகளை வழங்கியமையே காரணமாகும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள், அவர்களின் பதவி இழப்புச் செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை நாம் அவதானிக்கின்றோம்.

இந்நிலையில், கடந்த காலங்களில் எமது தனியார் போக்குவரத்து துறையானது, ஆக்கபூர்வமான சேவையை மக்களுக்கு செய்வதற்கு, எமது அமைச்சர் மற்றும் அமைச்சு அதிகாரிகளும் கைகொடுத்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை மாற்றுமாறு அவர் சார்ந்த கட்சியால் தங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம்.

வடக்கில் போக்குவரத்து துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவும் போக்குவரத்து துறையினருக்கு நியதிச்சட்டங்களை உருவாக்கிடவும் அதனோடு இலங்கையில் எங்குமில்லாதவகையில் வட மாகாணத்தில் 60 இற்கு 40 என்ற இணைந்த நேர அட்டவணையை அறிமுகம் செய்து அதனை வர்த்தமானியில் பிரசுரித்த பெருமை போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை சார்ந்ததாக கருதுகின்றோம்.

இதனோடு, வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தை இயங்கச்செய்வதற்கு கடும் பிரயத்தனங்களை  அமைச்சர் மேற்கொண்டு வரும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவது தனியார் பஸ் உரிமையாளர்களாகிய எமது வாழ்வாதாரத்திலும் எமது பஸ்களை நம்பி ஜீவனோபாயத்தை நடத்திவரும்; தொழிலாளர்களையும் பாதிக்கும் செயற்பாடாக உள்ளது.

நீண்ட காலமாக,  தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் முரண்பாடுகளை களையும் ஒரு வடிவமாக வடக்கில் இணைந்த நேர அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதில் சில தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வட மாகாண போக்குவரத்து அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் அமைச்சரை நீக்கும் செயற்பாட்டை, தாங்கள் மீள் பரிசீலணை செய்து நல்லதொரு முடிவை மேற்கொள்வீர்கள்' என நம்புகின்றோம்.

இந் நிலையில் கடந்த காலங்களில் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட தடங்கல்களை களையும் பொருட்டு தங்களை சந்திப்பதற்கு எமது சங்கமானது முயற்சியை மேற்கொண்டிருந்போதிலு;ம் தங்களது வேலைபளு காரணமாக அது சாத்தியமற்று போயிருந்தது.

எனினும் எமது சங்கத்திற்கும் தங்களுக்குமான சந்திப்பு எமது எதிர்பார்ப்புகளை நிவர்த்திக்கும் வகையில் இதுவரை நடந்தேறவில்லை என்ற கவலையான விடயங்கத்னையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விளைகின்றோம்.

இவ்வாறான நிலையில் வட மாகாண போக்குவரத்து சேவையை கருத்தில் கொண்டு போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன் அவர்களை பதவியில் இருந்து நீக்கும் செயற்பாட்டை நிறுத்தியோ அல்லது காலம் தாழ்த்தியோ வைக்குமாறு தாழ்மையுடன் தங்களிடம் கோருவதுடன் அவர்களுக்கு எதிராக தங்களால் முன்னெடுக்கப்படும் நியாயபூர்வமானவிசாரணையில் அமைச்சர் மீது குறறம்நிரூபிக்கப்பட்டு அதற்கு அவர் கட்டுப்பட தவறும் பட்சத்தில் அதற்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க தயங்கமாட்டேம் எனவும் அக்கடித்தில் தெரிவிக்கப்ப்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X