2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வான்பகுதியை புன​ரமைத்து தரும்படி கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் சேதமடைந்து காணப்படும் வான் பகுதியினை உரிய முறையில் புனமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் மீள்குடியமர்வின் பின்னர் புனரமைக்கப்பட்ட போதும், அதன் வான்பகுதி உரியமுறையில் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், வான்பகுதியில் காணப்படும் வெடிப்புக்களின் மூலம் நீர்க்கசிவு ஏற்படுவதாகவும் இதனை புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது வான்பகுதி  புனரமைக்கப்படுகின்ற போதும் அவை உரியமுறையில் புனரமைக்கப்படவில்லை என்றும் இதனை உரிய முறையில் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி அக்கராயன் குளத்தின் கீழ் சுமார் 3,417ஏக்கர் நிலப்பரப்பில் 1,819 விவசாயிகள் வருடாந்தம் காலபோகப் பயிர்செய்கையினையும் சுமார் 2,000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் சிறுபோக செய்கைகளை மேற்கொள்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .