2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘வெளிச்சவீடு அமைக்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறோம்’

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில், வெளிச்சவீடு அமைக்கப்படாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் திருஞானதீபன் அன்டனி தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 2010ஆம் ஆண்டில் இருந்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில், வெளிச்ச வீடு தொடர்பாக கோரிக்கை விடுத்து வருவததகவும் வெளிச்சவீடு இல்லாததன் காரணமாக, கடலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் கரை திரும்புவதில் நெருக்கடிகள் காணப்படுகின்றனவெனவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற படகுகள், தொழில் உபகரணங்கள் நவீன வசதிகள் கொண்டவையல்லவெனத் தெரிவித்த அவர், இந்நிலையில் வெளிச்சவீடு இல்லாததன் காரணமாக, தொழிலாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனரெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்தில் வெளிச்ச வீடு இருந்ததாகத் தெரிவித்த அவர், போர் காரணமாக வெளிச்ச வீடு அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X