2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேழமாலிகிதனிடம் விசாரணை

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைச்சிப்பிரதேச சபையினுடைய தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் பயங்கரவாதத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கொழும்பில் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி - கரைச்சிப்பிரதேச சபை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவியமை, அதில் ஈழம் என்ற சொல் பொறிக்கப்பட்டமை தொடர்பிலேயே, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் (17) கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு, கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தல்களுக்கு அமைய, இன்று காலை கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் காலை பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில், கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிடுகையில், கரைச்சிப்பிரதேச வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கு பிரதேச சபைக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம், ஈழம் என்ற சொல்லை யார் எழுதியது, ஈழம் சொல் சட்டவிரோதமானது. பிறமதங்களுக்கும் பிரதேச சபையில் இடங்கள் வழங்கமுடியுமா உள்ளிட்ட 19 கேள்விகள் விசாரணைகளின் போது கேட்கப்பட்டதெனத் தெரிவித்தார்.

இதற்கு, ஈழம் என்ற சொல் சட்டவிரோதமானதொன்றல்ல எனவும் இலங்கையில் தேசிய கீதத்திலும் இந்த சொல் இருக்கின்றதெனவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலர் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்திருக்கின்றாரெனவும் திருவள்ளுர் உலகப்பொதுமறையாகிய திருக்குறளை இயற்றியதனால் அச்சிலை வைக்கப்பட்டதெனவும் தான் பதிலளித்ததாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .