2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'விகாரை அமைப்பதில் பிரச்சினை மக்களுக்கு இல்லை'

Niroshini   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவு - கொக்குளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவில் நேற்று (09) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும் வேறு ஒருவரின் காணியில் மக்கள் இல்லாத இடத்தில் அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டால் அது குற்றம் என தெரிவித்த அவர், வேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாது என தெரிவித்தார்.

எனினும், கரைதுரைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளரால் குறித்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் யாருக்கும் கோவில் கட்டமுடியும் பள்ளி கட்ட முடியும் அது அவர்களின் விருப்பம்இ ஆனால் விகாரை தொடர்பான பிரச்சினை மக்களுக்கு இல்லை எனவும் அரசியல்வாதிகளுக்கே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .