2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

விசாரணைகள் முடியாவிட்டால் அரசாங்கத்தால் வேறு ஏதாவது குழுக்கள் அமைக்கப்படலாம்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'எமது ஆணைக்குழு இவ்விசாரணைகளை முடிக்காவிட்டால், அரசாங்கத்தால் வேறு ஏதாவது குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தலாம். அவ்வாறு அமைத்தால், அவர்களிடம்  விசாரணை தொடர்பான ஆவணங்களை கையளிப்போம்' என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், கடந்த மூன்று  நாட்களாக முல்லைத்தீவு  மாவட்ட செயலகத்தில், ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


'காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்கு  தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 366 பேர் சாட்சியமளித்தனர்.

அந்தவகையில், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்களது முறைப்பாடுகளை விசாரணைக்குழுவிடம் கையளித்து, அது தொடர்பில் விசாரணைகளை நடத்தி, விபரங்களை பெற்றுக் கொள்ளவுள்ளோம்;' என்றார்.

மேலும், 'இந்த மூன்று தினங்களிலும் 110 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளவர்கள் தொடர்பாக நான் எதுவும் கூறமுடியாது. ஏனெனில், எமது ஆணைக்குழுவின் காலம் ஜூன் மாதம் வரைதான் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலத்துக்குள் பதிவு செய்து  சாடச்சியமளித்தவர்களுக்கான விசாரனைகளை நிறைவு செய்ய வேண்டும்.

இந்திய இராணுவத்தால் காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பாக சில முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. நாங்கள் இது தொடர்பாக விசாரித்து எங்களுடைய இறுதி அறிக்கையில் குறிப்பிட்டு, இது தொடர்பாக தீர்மானமெடுப்பதற்காக  ஜனாதிபதியிடம் கையளிப்போம்' என தெரிவித்தார்.
';அண்மையில் இரண்டாவது  பணிப்பானை தொடர்பான இறுதி அறிக்கை நாம் வெளியிட்டிருக்கிறோம். அது, இறுதி யுத்தத்தின் போது சர்வதேச சட்ட விதிமுறைகள் மீறியமை தொடர்பானது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த அறிக்கையின் மூலம் எமது குழு தொடர்பாக எவ்வாறு  செயற்படுகிறோமென தீர்மானிக்க முடியும்.

இந்த ஆணைக்குழு இராணுவத்தின்மீது குற்றம் சுமத்தாது என்ற முடிவுக்கு வரமுடியாது. இராணுவமோ விடுதலைப்புலிகளோ அல்லது வடக்கின் வேறெந்த அரசியல் கட்ச்சியோ குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அதை நிச்சயமாக எமது இறுதி அறிக்கையில் குறிப்பிடுவோம்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .