2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய அரசின் உதவியுடன் கிளிநொச்சியில் 12,500 வீடுகள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் போரினால் பாதிப்படைந்துள்ள வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்திய அரசின் உதவியுடன் 12 ஆயிரத்து 500 வீடுகள் புதிதாக அமைக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வேலைத் திட்டங்களின் மதிப்பீடுகளை மேற்கொள்ள இந்திய உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர் என தெரிவிக்கும் அரச அதிபர், கிளிநொச்சியில் இதுவரை இடம்பெயர்ந்த ஒரு இலட்சத்து ஏழாயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .