2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடம்பெயர்ந்த மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

செட்டிகுளம் வலயம் 4 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,600 குடும்பங்களைச் சேர்ந்த 5,000 பேரை இன்று புதன்கிழமை பலவந்தமான முறையில் செட்டிகுளம் கதிர்காமர் நிலையத்திற்கு மாற்றும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

செட்டிகுளம் வலயம் 4 நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி பின் ஒரு மாத காலத்திற்குள் அம்மக்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்தது.

எனினும், அந்த நலன்புரி நிலையத்திலுள்ள மக்களுக்கு வேறு நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல விருப்பமில்லை. தங்களை தற்போதுள்ள நலன்புரி நிலையத்திலே வைத்திருந்து பின்னர் தம்மை மீள்குடியேற்றுமாறும் தங்களை இடமாற்றும் சமயத்தில் தங்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள், வேலை வாய்ப்புக்கள் இல்லாது போய்விடும் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அம்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவர் இவ்விடயம் தொடர்பாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மக்களின் இடமாற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .