2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கான இலங்கை பிரஜா உரிமைப் பத்திரம் வழங்கும் நடமாடும் சேவை இன்று வவுனியா, பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் அனுசரனையுடன் அரசியலமைப்பு அலுவல்கள்  மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இந்த நடமாடும் சேவையினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த வைபவத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்கிளஸ்கே, குடிவரவு குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியதிலக உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இன்றைய வைபவத்தில் சுமார் 200 பொது மக்கள் கலந்து கொண்டனர். நாளை வியாழக்கிழமையும் இந்த நடமாடும் சேவை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

தாம் நீண்டகாலமாக இலங்கை பிறப்பு அத்தாட்சி பத்திரமின்றி பல சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் இந்த ந்டமாடும் சேவை பயன் உள்ளதாக அமைந்திருந்தது என பொது மக்கள் பலரும் இதன்போது கருத்து தெரிவித்தனர். இதன்போது உரையாற்றிய மாவட்ட அரச அதிபர் திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ், "நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டம் இதுவாகும்" என  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X