2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முன் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அடைக்கலநாதன் எம்.பி.வரவேற்பு

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                      (எஸ்.ஜெனி)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பணவுகளை வழங்கும் பொருட்டு சிறுவர் நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்ததை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்கு' சேவ் த சில்ரன்' அமைப்பு முதற்கட்டமாக 100 மில்லியின் ரூபாவை வழங்கியுள்ளதாகவும், ஏனைய அரசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து இந்நிதியத்திற்கான நிதியை பெற உத்தேசித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில் வடக்கிலும் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் எவ்வித கொடுப்பணவுகளும் இன்றி முன்பள்ளி ஆசிரியர்களாக தம்மை அர்ப்பணித்து வருகின்றனர். இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்வது போன்று வட மாகாணத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

வடக்கில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாத கொடுப்பனவு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X