2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அடை மழையினால் பாதிப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சன்னார் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தற்போது பெய்து வரும் அடை மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் 128 குடும்பங்களைச் சேர்ந்த 815 பேர் சன்னார் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும் இவர்களுக்கு தற்காலிகமான வீடு அமைப்பதற்கு தரப்பால் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மர நிழலின் கீழ் அம்மக்கள் தரப்பால்களினால் குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது பெய்துவரும் மழை காரணமாக அம்மக்களின் குடிசைகளைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் குழந்தைகள் முதல் அனைவரும் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் அம்மக்களின் மீது கவனம் செலுத்துமாறு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .