2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வன்னிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வன்னிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் சகல பாடத்துறைகள் சார்ந்த ஆசிரியர்களுக்கும் சம்பந்தப்பட்ட கல்வி வலயங்களால் கணினிப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிநெறிக்கான கருத்தரங்கும் செயல்பட்டறையும் தொடர்ச்சியான வதிவிடப் பயிற்சியாக பதினெட்டு நாட்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிநெறி கடந்த 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சுழற்சிமுறையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்குபற்றும் ஆசிரியர்ககளுக்கு 3 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. இது இந்த வருடத்துக்கான இறுதிப் பயிற்சியாகும்.        

மல்லாவியில் உள்ள யோகபுரத்தில் நடைபெற்று வரும் இந்தப்பயிற்சி நெறியானது, வதிவிடப்பயிற்சி எனச் சொல்லப்படுகின்ற பொழுதும் பல ஆசிரியர்கள் தமக்கான தங்குமிடங்களைத் தாமே தேடிக் கொள்ளவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் சுயவாண்மை விருத்திக்கும்,வகுப்பறைக் கற்பித்தலுக்கும் இது மிகவும் உறுதுணை வாய்ந்த செயல்திட்டமெனத் தெரிவிக்கப்படுகிறது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .