2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வன்னியில் சகல வசதிகளுடன் பாடசாலை அமைக்கப்பட வேண்டும்: வடமாகாண ஆளுநர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வன்னியில் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் பாடசாலையொன்று சகல வசதியும் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி-ஏ-சந்திரசிறி தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மத்தியில் இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய கேட்போர்கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வைபவத்தில் பேசியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாடெங்கும் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டம் பற்றி விளக்கம் அளிக்கும் கூட்டம் நடைபெற்றது.

வன்னி; மாவட்டத்தில் 140 பாடசாலைகள் இனம் காணப்படவுள்ளது. இந்த பாடசாலைகளின்; அபிவிருத்திக்கு கல்வி அமைச்சினால் 60 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் ஆளுநர் கூறினார.;

எமது நாட்டுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியமானது. எதிர்கால தலைமைத்துவ பிரஜைகளை உருவாக்கும் செயல்திட்டங்கள் பாடசாலைகள் மூலம் தான் ஆரம்பி;க்கின்றது என குறிப்பிட்ட வடமாகாண ஆளுநர், மஹிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி என்பது இந்த நாட்டில் சகலருக்கும் சமமானது.
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சகல வளங்களும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும.; அதற்கான பங்களிப்பை சகல தரப்பினரும் வழங்குவது அவசியமானது எனவும் அவர் கூறினார்.

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாண கல்விப்பணிப்பாளர் கே.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .