2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சீட்டு கொடுக்கல் வாங்கல்களை ஒருவாரத்தில் முடிக்க வேண்டும்: பிரதி பொலிஸ்மா அதிபர்

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா )

தினசீட்டு கொடுக்கல் வாங்கல்கள் யாவும் ஒரு வாரத்தில் நிவர்த்தி செய்யப்பட்டு வவுனியா நகரில் வர்த்தக நடவடிக்கைகள் யாவும் சுமுகமான முறையில் நடைபெறவேண்டும் என வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்னா நாணயக்கார தெரிவித்துள்ளார்.

'சீட்டு கொடுக்கல் வாங்கல் காரணமாக  பல வர்த்தகர்கள் பெருமளவு பணத்தை இழந்துள்ளனர்.  பலர் பணத்தை சுருட்டியுள்ளனர் என்பது எமக்கு தெரியும்' என சீட்டு பிடிக்கும் வர்த்தகர்களை நேற்று புதன்  தனது அலுவலகத்திற்கு அழைத்து நடத்திய கலந்துரையாடலின்போது இதனை தெரிவித்துள்ளார்

'யார் யாரிடம் பணம் உள்ளது  என்ற விபரங்கள் யாவும் எம்மிடமுள்ளது. பெருமளவு பணம் முடங்கியுள்ளதினால் வர்த்தக நடவடிக்கைகள்  சீராக நடைபெறவில்லை. எனவேதான் இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கல் வாங்கல்களை  உடன் மேற்கொள்ளவேண்டும' எனவும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X