2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிராமிய பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வவுனியா மாவட்டத்தில் மீள்எழுச்சி திட்டத்தின் கீழ், மதீனா நகர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய பயிற்சி நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக  17 இலட்சம் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது.  வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின்  தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.


இப்பிரதேசத்தில் தையல் பயிற்சிகளை நிறைவுசெய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, புளித்தறித்தகுளம் அரபா கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்விலும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .