2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிச்சைக்காரர்களுக்கு புனர்வாழ்வு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.விவேகராசா)

வவுனியா நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு  புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தினை நகரசபையும் மாவட்ட செயலகமும் இணைந்து மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரிலும், ஆலயங்களின் முன்னாலும் பிச்சை எடுப்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட 80பேர் பொலிஸாரின் உதவியுடன் பிடிக்கப்பட்டனர் என நகர சபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.

நகரசபை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்ட இவர்கள் பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆதரவற்றவர்கள் முதியோர் இல்லங்களுக்கும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் அல்லது முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்படுவர்.

மனநலம் குன்றியவர்கள் உரிய சிகிச்சையின் பொருட்டு  சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு  கொண்டு செல்லப்படுவார்கள் என குறிப்பிட்ட பிரதேச செயலாளர்  ஏ.சிவபாதசுந்தரம், பிச்சைக்காரர்களினால் நகரம் பல வழிகளிலும் அசுத்தமடைகின்றது என்றும் தெரிவித்தார்.

கடைத்தொகுதிகள் இவர்களுடைய இருப்பிடமாக இருந்து வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கென்று ஒரு புனர்வாழ்வு திட்டம் தயாரிக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார். 

மாவட்ட அரச அதிபர் தனது உரிய அதிகாரிகளுடன் நகரசபை மண்டபத்திற்கு வந்து இவர்களுடைய நலன்குறித்து ஆராய்ந்தனர். வெளி மாவட்டத்திலிருந்து பிச்சை எடுப்பதற்கு பெருமளவிலானவர்கள் வவுனியா நகருக்கு வருகின்றார்கள் என்பது பொலிஸாரின் தகவலின் மூலம் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X