2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கல்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.விவேகராசா)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  ஆலோசனைக்கமைய  வடக்கே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கும் முதல் நாள் வேலைத்திட்டம் இன்று ஞாயிறுற்றுக்கிழமை செட்டிகுளத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சின் முக்கிய அதிகாரிகள்  செட்டிகுளத்தில் வைத்து குருக்கள் புதுக்குளம், கந்தசாமிநகர், மெனிக்பாம், மற்றும் பிரமணாளங்குளம் பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 109 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கினார்கள்.

ஓவ்வொன்றிலும் 4500 ரூபாய் பெறுமதி வாய்ந்த உணவுப்பொருட்கள் பொதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X