2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எருக்கலம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறிய முஸ்ஸிம்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்ஸிம் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் கவலை தெரிவித்தனர்.

யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட இம் முஸ்லிம் மக்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். சுமார் 700 குடும்பங்கள்  தற்போது தமது சொந்த விருப்பத்தின் பேரில் மீண்டும் மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறி வருகின்றனர்.


இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் குறைந்தளவில் வழங்கப்படுவதுடன்,  மீள்குடியேறியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லையென அம்மக்கள் தெரிவித்தனர்.

தற்போது இவர்களுக்கு தங்குமிட பிரச்சினை நிலவி வருவதுடன், இவ்வாறு எருக்கலம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறிய குடும்பங்கள்; வீடுகள் இல்லாத நிலையில் உறவினர்கள் மற்றும் பாவனையற்ற வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவ் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை விட்டுத் தருமாறு கேட்டுள்ளதால், தாங்கள் தற்போது நிர்க்கதியான நிலையிலுள்ளதாக அம்மக்கள் கூறினர்.

இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென அம்மக்கள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .