2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்காக வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: றிசாட்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா மாவட்டத்தின் பிரதேச சபைகளை நாம் கைப்பற்றுவதன் மூலம் பின்தங்கியுள்ள கிராமங்கள் பல வகையிலும் துரிதமாக அபிவிருத்தி காணும் என தெரிவித்துள்ள வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியூதீன் எங்களுடைய வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் போட்டியிடும் நான்கு பிரதேச சபைகளின் வேட்பாளர்களுடனான சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோது அமைச்சர் அதனை குறிப்பிட்டார்.

கிராமத்தலைவர்களை உருவாக்குவதன் மூலம் நாம் எமது அரசிடமிருந்து தேவையான நிதியை பெற்று மக்களுக்கு தேவையான  அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்றார்.

அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல்பாரி சரீப் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வேட்பாளர்கள் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் கிராமிய மட்டத்தில் சிறு கருத்தரங்குகளை வைத்து அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விளக்கலாம் எனவும் அவர் சொன்னார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .