2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வன்னியில் தேர்தல் பிரசாரம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்படவுள்ள நிலையில் வன்னி மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களுக்காக பிரசார நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இரண்டு பிரதேசபைகள் தவிர ஏனைய வவுனியா, மன்னார்  மாவட்டங்களில் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும.; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வன்னி மாவட்டத்தில் வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரசியல்கட்சிகளினதும் மற்றும்  சுயேட்சைக்குழுக்களின் வேட்பாளர்கள் கிராமங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு மக்கள் சந்திப்புக்களையும் நடத்திவருகின்றனர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளும் கட்சி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் அடுத்த சில தினங்களில் வவுனியாவிலும் மன்னாரிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதேநேரத்தில் குடாநாட்டு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னி முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். முல்லைத்தீவில் பிரஜைகள் முன்னணி கட்சி செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்கா, வன்னி மாவட்ட ஆளும் கட்சி எம்.பி.  ஹுனைஸ் பாரூக், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், புளொட் தலைவர் ரி.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்காக வவுனியா வரவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .