2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

டெங்கு நுளம்பு அழிப்பு நடவடிக்கைகள் வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மாலை நேரங்களில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான புகைவிசிறல் செயல்பாடுகள் சுகாதார திணைக்களகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த மாதம் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையில் சுகாதார அமைச்சினால் நாடாளாவிய ரீதியில் நுளம்பு ஒழிப்பு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது அந்த வகையில் வவுனியாவின் சகல கிராமசேவையாளர் பிரிவுகளிலும் புகைவிசிறல் ந்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் இடைக்கிடையில் மழை பெய்வதினாலும். தென்னிலங்கையிலிருந்து பெருமளவிலானவர்கள் வவுனியா நகருக்கு வந்து போவதினாலும் டெங்கு ஒழிப்பு செயல்பாடுகளை நாம் கைவிடவில்லை எனவும் டாக்டர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .