2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணிப் பிரச்சினைகள் குறித்து வவுனியாவில் உயர்மட்ட மகாநாடு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகாரசா)

வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய உயர்மட்ட மகாநாடு இன்று வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதிலும் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.

பல பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்பட்டன. குளங்களை அத்துமீறி பிடித்து நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகம் இல்லாத காலத்தில் அரசாங்கக் காணிகளை  பலர் அத்துமீறி பிடித்தமை,  வீதி  அபிவிருத்தி அதிகாரசபையினர் குடியிருப்பாளர் காணிகளை பெருமளவு சுவீகரித்து வீதி எல்லைக்கோடுகள் இட்டமை போன்ற பல பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதென மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் 20 முதல் 30 வருடங்களாக குடியிருக்கும் பலருக்கு காணிக்கான உறுதிப்பத்திரங்கள் கிடைக்காமை தொடர்பாகவும் இந்த மகாநாட்டில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணிக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லாமையால்; வங்கியில் கடன் பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல்;,   ஏனைய வாழ்வாதார உதவிகளை குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல் ஆகியன இங்கு  சுட்டிகாட்டப்பட்டது.

சட்டமா  அதிபர் திணைக்களகத்தைச் சேர்ந்த அரசாங்கத் தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி குமரன் இரட்ணம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், நான்கு பிரதேச செயலாளர்கள், காணி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள், நில அளவை திணைக்கள அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள், நகரசபை செயலாளர், நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர், பொலிஸார் உள்ளிட்ட பலரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .