2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பணிகள் பாராட்டத்தக்கது'

Kogilavani   / 2011 ஜூன் 23 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வன்னிப் பிரதேசத்தில் வளப்பற்றாக்குறைகளின் மத்தியில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களும் அதிபர்களும் அவர்களை வழிநடத்தும் கல்விப் பணிமனையினரும் பாராட்டப்படவேண்டியவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

முகாவில் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கபட்ட  வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  

கடந்த காலங்களில் மரங்களின் கீழே வகுப்புகளை நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. மழை, வெயில் போன்ற காரணங்களால், மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர். ஆனாலும் வளப்பற்றாக்குறைகளைச் சுட்டிக் காட்டி தமது கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை இவர்கள் புறந்தள்ளவில்லை. இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மரங்களின் கீழே வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை மாற்றப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சுவிஸ் அரசின் அபிவிருத்திக்கும் நல்லெண்ணத்துக்குமான அமைப்பினால் இவ்வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சிக் கல்வி வலயப் பணிப்பணிப்பாளர் த. குருகுலராஜா, பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் த. முகுந்தன், பளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆனந்தசிவம், சுவிஸ் அரசின் அபிவிருத்திக்கும் நல்லெண்ணத்துக்குமான அமைப்பின் பிரதிநிதிகள், பளை மத்திய கல்லூரி அதிபர் க.குணபாலசிங்கம், இயக்கச்சி அ.த.க.பாடசாலையின் அதிபர் ரவீந்திரன், மாசார் அ.த.க. பாடசாலையின் அதிபர் திருமதி தயாநிதி, பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், முகாவில் பிரதேச கிராம அலுவலர் இ.சுதர்சன், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X