2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுத்த சூழலில் வளர்ந்தவன் நான்; வட மாகாணத்தில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை: மாணவன் சேதுரா

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

"வன்னியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் வளர்ந்தவன் நான்.  வடமாகாணத்தில் முதலிடத்தைப் பெறுவேன் என நான் நினைத்திருக்கவில்லை"  என ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்ற  முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவனான பரமேஸ்வரன் சேதுராகவன் தெரிவித்தார்.

அவர் வட மாகாணத்தில் அதி கூடிய புள்ளிகளையும்  அகில இலங்கை ரீதியில் இரண்டாம் அதி கூடிய புள்ளிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடையளித்தலில் ஏற்பட்ட கவனயீனத்தால் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனதாக பரமேஸ்வரன் சேதுராகவன் கூறினார்.  

வட மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றமை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"வன்னியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் வளர்ந்தவன் நான். இவ்வாறு முதலிடத்தைப் பெறுவேன் என நினைத்திருக்கவில்லை. எனது தந்தை புதுக் குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரியாகவும் தாய் கரவெட்டி யார்க்கரை அ.த.க. பாடசாலையில் ஆசிரியையாகவும் உள்ளனர்.

நான் பாடசாலையிலும் அம்மாவிடவுமே கல்வி கற்றேன். எனது பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கள் இல்லாத காரணத்தினால் முழுமையாக பாடசாலைப் படிப்பினையே நம்பியிருந்தேன். எனது வெற்றிக்குரிய அதிபர், ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இலங்கை ரீதியில் இரண்டமிடத்தைப்பெற்றது சந்தோசமாக இருந்தபோதிலும் முதலிடத்தைப் பெறமுடியாமல் போனது கவலை தான். எனது கவனயீனமே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெறுவதற்கு தடையாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

நான் பெரியவனானதும் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். எனது வெற்றிக்குரிய ஆண்டவனுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • AJ Saturday, 17 September 2011 11:29 PM

    எது இழந்தாலும் எங்களுடைய கல்வி செல்வதை தாங்கள் எப்போதோமே விட ஒருபோதும் தயார் இல்லை . அன்று யாழ் வாசிக்க சாலை எரித்த போதும் இன்றும் இன அழிப்பு நடந்த போதும், எல்லாம் இழந்தபோதும் நாங்கள் கல்வி செல்வதை விட தயார்வில்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். எங்களுடைய புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து உதவ வேண்டும்.

    Reply : 0       0

    tvamban Sunday, 18 September 2011 12:33 AM

    இன்னும் பல பெறுபேறுகளை உம்மிடம் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள். வன்னி மண்ணில் இருந்து இன்னும் பல சாதனைகளை எதிர்பார்க்கிறோம்.

    Reply : 0       0

    Kalkudah Adam Sunday, 18 September 2011 08:09 AM

    வாழ்த்துக்கள் பரமேஸ்வரன்.

    Reply : 0       0

    neethan Sunday, 18 September 2011 04:41 PM

    யுத்த சூழ்நிலை இன்னுமா அங்குள்ளது? ராணுவ பிரசன்னம் அச்சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு தடையாக உள்ளதா? எதுவாக இருந்தாலும் உன் பெறுபேறு ஏனைய மாணவர்களுக்கும் முன்மாதிரியாக அமையட்டும். வாழ்த்துகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .